தரமற்ற எரிபொருளை இறக்குமதி செய்தமை மூலம் சபந்தப்பட்ட நிறுவனங்களின் முகவர்களும் அரசியல்வாதிகளும் 100 மில்லியன் டொலர் சம்பாதித்துள்ளதாக சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
குறித்த தகவல் தமக்கு கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தற்போதைய எரிசக்தி அமைச்சர் நியமிக்கப்பட்டதன் பின்னர் எரிபொருள் இறக்குமதிக்காக புதிய நிறுவனம் பதிவு செய்யப்பட்டு அதன் ஊடாக எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இன்று (5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மலிவு விலையில் எரிபொருளை வாங்கக்கூடிய நிறுவனங்களுக்கு பதிலாக தரம் குறைந்த கச்சா எண்ணெயை அதிக விலைக்கு கொள்வனவு செய்வதால் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.