இலங்கை தொடர்பான மற்றுமொரு பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நாளை (06) சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பலம் வாய்ந்த நாடுகள் கூட்டாக இந்த பிரேரணையை சமர்ப்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
மனித உரிமையை ஆயுதமாக பயன்படுத்தி இலங்கையை வாழ்நாள் முழுவதும் கட்டுப்படுத்த அந்நாடுகள் முயற்சிப்பதாக அலி சப்ரி தெரிவித்தார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, வடக்கு அயர்லாந்து, வடக்கு மசிடோனியா, ஜெர்மன், மலாவி மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய கோர் குழு அறிக்கை வெளியிருந்தமை குறிப்பிடத்தக்கது.