ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை ஆகியன பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான விசேட வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 44வது சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆட்பதிவு திணைக்களம் தொழில்நுட்ப அமைச்சின் கீழும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் கீழும் இருந்தது.
அத்தோடு, தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை முன்பு பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்தமை குறிப்பிடத்தக்கது.















