அதிகாரங்களை மீறும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு – காலி முகத்திடலில் நேற்று இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தில் கூட்டத்தைக் கலைக்க பொலிஸார் வருகை தந்ததை அடுத்து, அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இந்த விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்ட விரோதமான உத்தரவின் பேரில் செயற்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்றாவது ஒரு நாள் தமது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பதில் கூறவேண்டி வரும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும் என சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, தங்கள் முதலாளிகளை திருப்திப்படுத்துவதற்காக மக்களின் உரிமைகளை மீறும் பொலிஸ் அதிகாரிகளை தான் பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நீதியின் சக்கரங்கள் மெதுவாக வரலாம், ஆனால் அவை நிச்சயமாக வரும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.