• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருந்த ஒற்றுமை இன்று இல்லை – ஜனா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருந்த ஒற்றுமை இன்று இல்லை – ஜனா

shagan by shagan
2022/10/11
in இலங்கை
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருந்த ஒற்றுமையோ பலமோ இன்று இல்லை.  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேசத்தில் வளைகுடா வானம்பாடிகள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், இழந்த உயிர்களைத் தவிர மற்றையவைகளையெல்லாம் கல்வியின் மூலமாக மீளப் பெற்றிட முடியும் என்ற நம்பிக்கை எமது இனத்திற்கு இருக்கின்றது. ஏனெனில் ஒரு காலத்திலே இலங்கையிலே எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் தமிழர்கள் கோலோற்றிய நிலை இருந்தது. அந்த நிலை மீண்டும் வரவேண்டும்.

தற்போது தமிழர்கள் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரமல்ல வடக்கு கிழக்கிலே ஒற்றுமையாக இருக்க வேண்டிய காலகட்டத்திலே இருக்கின்றோம். ஏனெனில் நாங்கள் பல இழப்புகளைச் சந்தித்து அரசியல் ரீதியில் நடுச் சந்தியில் நிற்கின்றோம். ஆயுத ரீதியில் பல முரண்பாடுகள் எங்களுக்குள் இருந்தும் 2001லே அரசியல் ரீதியாகக் குரல் கொடுப்பதற்கு ஒரு சக்தி வேண்டும் என்பதற்கான ஒரு சக்தியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருந்த ஒற்றுமையோ பலமோ இன்று இல்லை. தமிழ்த் தேசியப் பரப்பிலே இருக்கும் அனைத்து சக்திகளும் இன்று ஒற்றுமையாக நிற்க வேண்டும். அதனைத தான் மேற்குலகமும் விரும்புகின்றது.

மேற்குலகும் இலங்கைக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்கின்றது. தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியற் தீர்வைக் கொடுக்கக் கோருகின்றது. கடந்த ஐநா பேரவையிலே பிரித்தானியாவால் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஐநா சபையிலே வாக்களிக்கக் கூடிய 47 நாடுகளில் 20 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. இலங்கைக்கு ஆதரவாக 07 நாடுகளே வாக்களித்துள்ளன.

இலங்கைக்கு ஆதரவளித்த நாடுகள் கொமினிசம் என்ற போர்வையிலே சர்வாதிகார ஆட்சி நடைபெறும் நாடுகளே. ஆனால் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளிலே ஜனநாயகம் இருக்கின்றது. அங்கு மொழி, இன ரீதியில் மாகாணங்கள் பிரிக்கப்பட்டு அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியா நடுநிலை வகித்துள்ளது. அதற்கு பல விமர்சனங்கள் இருந்தாலும், இந்தமுறை வளைகுடா நாடுகள் கூட நடுநிலை வகித்துள்ளன. இந்தியா நடுநிலை வகித்தமைக்கு அரசியற் காரணங்கள் பல இருந்தாலும் இந்தியா உறுதிபட ஒரு விடயத்தைக் கூறியிருக்கின்றது. 13வது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்ப்படுத்தப்பட்டு அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு மாகாணசபைத் தேர்தல் உடனடியாக நடாத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றது.

அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு மாகாண ஆட்சி எங்களது கையில் இருக்குமானால் இந்த மாதிரியான நில அபகரிப்புகள், எல்லைப்புற குடியேற்றங்கள், இல்மனைட போன்ற எமது வளங்கள் சுரண்டப்படுகின்ற விடயங்களுக்கு நாங்களே முடிவு கட்ட முடியும்.

எங்களை நாங்களே ஆளுகின்ற ஒரு உள்ளகச் சுயநிர்ணய முறைமை உருவாகுமாக இருந்தால் இத்தகு பிரச்சனைகள் இடம்பெறாது. தற்போது 24 வீதமாக இருக்கும் சிங்கள மக்களது சனத்தொகை மதிப்பீடு எதிர்காலத்தில் அதனைத் தாண்டிச் செல்லாமல் இருப்பதற்கு நாங்கள் வழிமுறைகளைக் கையாள முடியும்.

எனவே அம்பாறை மாவட்ட மக்கள் மிகவும் கவனமாக எதிர்வரும் தேர்தல்களைக் கையாள வேண்டும். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்ற காரணத்தினால் தான் தமிழ் மக்களின் பிரச்சனைகள் சர்வதேச ரீதியில் பேசப்படுகின்றது.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் எமது விடயங்கள் மாறி மாறி உள்வாங்கப்பட்டு பெசுபொருளாக இருந்து என்றோ ஒருநாள் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்ப்பதற்கான நிரந்தரத் தீர்வு வர வேண்டுமாக இருந்தால் சர்வசதேச அழுத்தமே மிக முக்கியமானது. அதற்குத் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மிக உறுதியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிணைமுறி மோசடி: அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்டோர் விடுதலை

Next Post

நாட்டிற்கு இராஜதந்திரிகள் விஜயம் செய்கின்றமை குறித்து அச்சமடைய வேண்டாம் – பந்துல

Related Posts

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்
இலங்கை

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

2026-01-28
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு
யாழ்ப்பாணம்

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

2026-01-28
ஹோட்டல் அறையிலிருந்து மீட்கப்பட்ட சடலம்!
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

2026-01-28
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கை தீவிரம்!

2026-01-28
சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாளாகவே இருந்துவருகின்றது-அமலராஜ் அமலநாயகி
இலங்கை

சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாளாகவே இருந்துவருகின்றது-அமலராஜ் அமலநாயகி

2026-01-28
தரமற்ற நிலக்கரி விநியோகத்திற்காக அபராதம் !
இலங்கை

தரமற்ற நிலக்கரி விநியோகத்திற்காக அபராதம் !

2026-01-28
Next Post
அரிசியை இறக்குமதி செய்ய ஜனாதிபதி அனுமதிக்க மாட்டார்- பந்துல

நாட்டிற்கு இராஜதந்திரிகள் விஜயம் செய்கின்றமை குறித்து அச்சமடைய வேண்டாம் - பந்துல

காத்தான்குடியில் நகரசபை உறுப்பினர் வீட்டை உடைத்து கொள்ளை!

காத்தான்குடியில் நகரசபை உறுப்பினர் வீட்டை உடைத்து கொள்ளை!

”முற்றுப்புள்ளி இடுவோம் சிறுவயது திருமணங்களுக்கு” எனும் தொனிப் பொருளிலான சிறுமியர் தினம்

”முற்றுப்புள்ளி இடுவோம் சிறுவயது திருமணங்களுக்கு” எனும் தொனிப் பொருளிலான சிறுமியர் தினம்

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

0
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

0
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

0
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

0
விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

0
புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

2026-01-28
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

2026-01-28
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

2026-01-28
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

2026-01-28
விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

2026-01-28

Recent News

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

2026-01-28
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

2026-01-28
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

2026-01-28
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

2026-01-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.