பல்வேறு காரணங்களுக்காக துறைமுகத்தில் சுங்கத் திணைக்களத்தில் அடைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட அரிசி கால்நடைத் தீவனத்திற்காக பயன்படுத்தப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
பல ஆண்டுகளாக துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொள்கலன்களில் உள்ள 1 மில்லியன் கிலோ அரிசியை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே, குறித்த அரிசி கால்நடைத் தீவனத்திற்காக பயன்படுத்தப்படும் என அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த அரிசி காலாவதியாகும் திகதி காரணமாக அது மனித பாவனைக்கு தகுதியற்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.