மனித உரிமை மீறல்கள் தொடர்பான வெளி விசாரணையைத் தடுப்பதற்கு, இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில், சர்வதேச சமூகத்தில் தனது இடத்தைப் பாதுகாப்பதற்காக முன்னைய சந்தர்ப்பங்களைப் போலல்லாமல், உண்மையைக் கண்டறிய உள்நாட்டு பொறிமுறை உதவும் என அரசாங்கம் நம்புவதாக அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அண்மையில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற கடுமையான புதிய தீர்மானத்தை நிறைவேற்றியது.
இந்நிலையில் உள்நாட்டு பொறிமுறை ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளும் வகையில் அதற்கான செயன்முறையை மேற்கொண்டுவருவதாகவும் இதற்காக ஐ.நா. தீர்மானத்திற்காக நிதியுதவி செய்த பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.