பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தம் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 77 வாக்குகளும் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினர் கட்சியின் உறுப்பினர்கள் உட்பட 17 வாக்குகள் எதிராக கிடைத்தன.
குறித்த சட்டமூலம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தேசிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கோரிக்கை விடுத்த படி வாக்குப்பதிவு நடைபெற்றது.
சட்டமூலம் மீதான விவாதம் நேற்று பகல் முழுவதும் நடைபெற்ற நிலையில், அங்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.