சிறைச்சாலைகளில் பெண்களுக்கென தனியான அறைகள் அமைக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிறைகளில் பெண் கைதிகள் தனித்தனியாக தங்க வைக்கப்பட்டிருந்தாலும், பெண்களுக்கு தனி இடங்களை ஒதுக்குவது முக்கியம் என்றும் அவர் கூறினார்.
ஐந்து நீதிச் சட்டமூலங்கள் மீதான நாடாளுமன்ற விவாதத்தின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இவ்வாறு தெரிவித்தார்.
சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் சட்டங்களில் திருத்தம் செய்து கைதிகளும் மனிதர்கள்தான் என்பதை அமைச்சர் உறுதிப்படுத்த முயன்றுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் தொற்றாத மற்றும் குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கூட சிறைகளில் உள்ளனர் என்றும் தலதா அத்துகோரள தெரிவித்தார்.