கோழி இறைச்சியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 1080 ரூபாவாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் அழைப்பாளர் சுஜீவ தம்மிக்க தெரிவித்தார்.
எதிர்வரும் பண்டிகையின் போது கோழி இறைச்சிக்கான தேவை அதிகரிப்பதை கவனத்தி்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், முட்டையின் விலையை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் சந்தையில் கோழி இறைச்சியின் விலை ஓரளவு குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, கடந்த காலத்தில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1500 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது அது 1080 ரூபாயாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.