சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது.
பெங்களூருவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட கருத்து தெரிவிக்கையிலேயே இஸ்ரோ இயக்குநர் சோம்நாத் இதனை உறுதிப்படுத்தினார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்படும் சந்திரயான்-3 விண்கலத்தில், சந்திரயான்-2 விண்கலத்தின் ஏற்பட்ட பிரச்னைகள் இதில் இருக்காது.
அதை விட இன்னும் வலுவானதாக சந்திரயான்-3 விண்கலத்தை உருவாக்கி உள்ளோம். இந்த விண்கலத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஒரு கருவி பழுதடைந்தால் மற்றொரு கருவி அந்த பணியை முன்னெடுத்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது’ என கூறினார்.