உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான பிரேரணை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள 8,719 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4000ஆக குறைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
உறுப்பினர்களைக் குறைத்து, அதன் மூலம் மீதமாகும் நிதியை நாட்டின் அபிவிருத்தி திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும் எனவும் எவ்வாறாயினும், இதனை காரணமாகக் கொண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் பிற்போடப்பட மாட்டாதெனவும் அவர் கூறினார்.