22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
இதன்படி, 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும் எதிராக 01 வாக்குகளும் கிடைத்தன.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மாத்திரம் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்திருந்தார்.
இதற்கமைய, சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார்.
தொடர்ந்து, குழு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது