2015-2019 காலகட்டத்தில் முன்னாள் சுகாதார அமைச்சரும், ஒரு இராஜாங்க அமைச்சரும் வரம்பை மீறி 24 வாகனங்களைப் பயன்படுத்தியதாக தேசியக் கணக்காய்வு அலுவலகம் கூறுகிறது.
இதன்படி, சுகாதார அமைச்சர் பதினாறு வாகனங்களையும், இராஜாங்க அமைச்சர் மேலும் எட்டு வாகனங்களையும் பயன்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அமைச்சருக்கு வருடாந்த எரிபொருள் கொடுப்பனவாக 20 இலட்சம் ரூபாயும், இராஜாங்க அமைச்சர் 40 இலட்சம் ரூபாயையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அமைச்சர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை விட மேலதிகமாக பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும் தேசியக் கணக்காய்வு அலுவலகம் கூறுகிறது.