மோசடி தொடர்பாக பண்டோராவில் வெளியான தகவலின் அடிப்படையில் வெளிநாடுகளில் உள்ள டொலர்களை இலங்கைக்கு கொண்டுவருமாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நாடு இழந்த பில்லியன் கணக்கான டொலர்களை கொண்டுவருவதன் மூலம் டொலர் தட்டுப்பாட்டை சரி செய்யலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதன் மூலம் மருந்துப்பொருட்கள் தட்டுப்பாடும், டொலர் நெருக்கடியும் தீர்க்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு செய்யாமல் சீனா, இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் கடன் வாங்குவது பிரச்னைக்கு தீர்வாகாது என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச வளங்களும் அரச சொத்துக்களும் மீட்கப்பட வேண்டும் என்றாலும் தற்போதைய அரசாங்கம் அதற்காக செயற்படும் என்ற நம்பிக்கை இல்லை என எதிர்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.