ஒரு வாரத்தில் காலநிலை மாற்ற செயலகத்தை அமைப்பதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்
இதற்கு மேலதிகமாக, காலநிலை மாற்றத்தை இலங்கை எவ்வாறு எதிர்கொள்கிறது மற்றும் அதை எவ்வாறு நிர்வகிப்பது என்பது தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளைத் தயாரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.
எகிப்து விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி இலங்கை திரும்பியதும் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என ருவான் விஜயவர்தன குறிப்பிட்டார்.