பலாலி விமான நிலையம் இயங்குவதற்கு தயாராக இருந்தாலும் அங்கு விமானங்கள் வருவதற்கு தயாராக இல்லாத நிலைமை காணப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இந்திய விமானங்கள் அங்கு தரையிறங்க தயாராக இல்லை என்றும் அதனாலயே விமான நிலையம் இயங்காத நிலையில் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இந்திய விமான நிறுவனங்கள் தமது விமானங்களை பலாலியில் தரை இறக்க தயார் எனில் ஒரு இரவில் பலாலி விமான நிலையத்தை இயங்க வைக்க என்னால் முடியும் என்றார்.
எவ்வாறாயினும் பலாலியில் இருந்த தொழிநுட்ப உபகரணங்கள் மற்ற விமான நிலையங்களுக்கு எடுத்து செல்லப்படவில்லை என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.