யால சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டம் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து வெளியிட்ட அவர், இந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு எந்த இடையூறும் ஏற்படாது என கூறினார்.
தாம் வெளிநாடு சென்றிருந்த வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.














