சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) அவசரகால கடனை இலங்கை ஒருபோதும் பெறாது என மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும் புலம்பெயர் தமிழ் மக்களின் பொதுச் செயலாளருமான நிமலன் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சர்வதேச நாணய நிதியம் வகுத்துள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கான சரியான பொறிமுறை எதுவும் இலங்கையிடம் இன்னும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வசதியை பெற்றுக்கொள்ளும் திறன் அரசாங்கத்திற்கு உள்ளது என்பதை காட்டுவதற்காக அப்பாவி மக்கள் மீது வரிகளை சுமத்தவே அரசாங்கம் முயல்கிறதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுடன்கூட நாட்டை உயர்த்துவது கடினம் என்பதை சர்வதேச நாணய நிதியத்தின் செயலாளர் ஒருவர்கூட உறுதிப்படுத்தியதாக விஸ்வநாதன் கூறியுள்ளார்.
தமது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் இருக்க வேண்டும் என்று ஐஎம்எப் அதிகாரிகள் தெரிவித்தனர் என்றும் அப்பாவி மக்கள் மீது பெரும் வரிகளை சுமத்தி, நாடு முன்னேற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு இந்த மிகப்பெரிய வரிகளால் நாட்டில் மக்கள் எந்த வியாபாரத்தையும் செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.