காணாமல் போனவர்கள் யாரும் இல்லை என்றால் அது தொடர்பாக முறையிடுவதற்கு காரியாலயம் எதற்கு என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஆகவே காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராயும் காரியாலயத்தின் தலைவரை பதவிநீக்கம் செய்து, செயற்திறன் கொண்ட ஒருரை நியமிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு அன்று எதிர்க்கட்சியில் இருந்தவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதை போல தாம் செயற்பட மாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் 88, 89 காலப்பகுதியிலும் காணாமல் போனவர்களும் 2000ஆம் ஆண்டிற்கு பின்னர் காணாமல் போனவர்களும் இருக்கின்றார்கள் என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஆகவே அவர்கள் தொடர்பாக உண்மையாக கண்டறிய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கத் தயார் என மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.