யாழ் – கொழும்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளின் வழித்தட அனுமதி,சாரதி அனிமதிபத்திரம் களும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் முகமாலையில் பரிசோதிக்கப்பட உள்ளதாக வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் உறுப்பினரும் வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தின் தலைவருமான சி,சிவபரன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் வடமாகாண உள்ளுராட்சி அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் கொழும்பு- யாழ்ப்பாண இரவு சேவையில் ஈடுபடும் பேருந்துகள் அனைத்தினதும் வழித்தட அனுமதி பத்திரங்கள்,சாரதி அனுமதிபத்திரம் முகமாலையில் பரிசோதிக்கப்படுவது எனவும் அதேபோல புளியங்குளப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் 20 நிமிடங்கள் நிறுத்தி மீண்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் கைதடியில் உள்ளூராட்சி அமைச்சில் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் எனவே நாளை மறுதினத்தில் இருந்து யாழ்ப்பாண கொழும்பு சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் தங்களுடைய வழித்தட அனுமதிப்பத்திரம் மற்றும் விசேட சாரதி அனுமதிப்பத்திரம் என்பவற்றை தங்களுடன் உடமையில் வைத்திருப்பது மிகவும் அவசியமெனவும் அது தவறும் பட்சத்தில் பொலிசார் மற்றும் வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகளால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு பயணித்த பேருந்து வவுனியாவில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி மூவர் உயிரிழந்தவை குறிப்பிடத்தக்கது,