மட்டக்களப்பு விமானபடபடை தளத்திற்கு முன்னால் உள்ள சுமைதாங்கி சந்தி வீதியை ஊடறுத்து 3 அடிக்கு மேல் வெள்ளநீர் பாய்ந்துவருவதால் பகுதி ஊடாக செல்லும் புதூர், வுணதீவு பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பயணிக்க முடியாத நிலை.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் மட்டக்களப்பு வாவிகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதையடுத்து பல பிரதேசங்களுக்களை ஊடறுத்துச் செல்லும் பாலங்களின் மேலால் வெள்ள நீரி பாய்ந்துவருகின்றது.
இந்த நிலையில் மட்டு நகர் பகுதியினையும் புதூர் வீச்சுகல்முனை, சேத்துக்குடா மற்றும் வவுணதீவு பிரதேசத்தையும் இணைக்கும் இந்த சுமைதாங்கி வீதியினை ஊடறுத்து வெள்ள நீர் ஓடுவதால் அந்தபகுதி மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் நகருக்கு வருமுடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.