யாழ்ப்பணத்தில் உள்ள இந்திய துணை தூதுவர் அலுவலகம் மீது கண்ணாடி போத்தலினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை வண்மையாக கண்டிப்பதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதுவர் அலுவகம் மீது நேற்று இரவு காரில் வந்த இனம் தெரியாத நபர் கண்ணாடி போத்தலினால் தாக்கி விட்டு சென்றதாக தெரிவிக்கப்டுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.குறித்த சம்பவம் சிறிய சம்பவமாக காணப்பட்டாலும் இதன் பின்புலம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்.
எங்களை பொறுத்த வரையில் இந்திய தூதுரகம் யாழ்ப்பாண மக்களுடன் மிகவும் அன்னியோன்னியமாக பழகிவரும் வரும் நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் கவலைக்குரியதும் கண்டிக்கத்தக்கதுமாகும் .