இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு வெளிநாட்டுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவர் எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி வரை நாட்டை விட்டு வெளியேற முடியாதென கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, குறித்த தினம் வரையில், டயனா கமகே வெளிநாடு செல்வதைத் தடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரித்தானியாவிலும் இலங்கையிலும் இரட்டைக் குடியுரிமையுடன் இரண்டு கடவுச்சீட்டுகளை வைத்திருப்பதாக அவர் மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.