நெவாடா மாகாணத்தில் நடைபெற்ற போட்டியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்று செனட் சபையின் கட்டுப்பாட்டை தக்கவைத்துள்ளது.
ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட கத்தரினை நெவாடா மாகாணத்தின் வெற்றியாளர் என அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் நேற்று சனிக்கிழமை அறிவித்தது.
குடியரசுக் கட்சியின் போட்டியாளரான அடம் லக்சால்ட்டை எதிர்த்து அவர் பெற்ற வெற்றி, செனட் சபையில் ஜனநாயகக் கட்சியினருக்கு 50 இடங்களைப் பெற்றுத் தந்துள்ளது.
இந்நிலையில் மீதமுள்ள இடமான ஜோர்ஜியாவில் டிசம்பரில் தேர்தல் நடைபெறவுள்ளது. செனட் சபை இரு கட்சிகளுக்கும் சமமான எண்ணிக்கை கிடைத்தால் கமலா ஹரிஸ் வாக்களிப்பார்.
செனட் சபையில் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாடு என்பது, அமைச்சரவை நியமனங்கள் மற்றும் நீதித்துறை தெரிவுகளை இலகுவாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.