முட்டைகளை பதுக்கி வைக்கும் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்.
சந்தையில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை எனவும், எனினும் சிலர் முட்டைக்கு தட்டுப்பாடு இருப்பதாக சித்தரிக்க முயல்வதாகவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட முட்டை விலையை மேலும் அதிகரிக்க ஒருபோதும் அனுமதி வழங்கப்போவதில்லை என்றும் வர்த்தக அமைச்சர் கூறியுள்ளார்.
உற்பத்தி செலவு கணிசமாக உயர்ந்துள்ளதால், அரசாங்கம் அறிவித்துள்ள அதிகபட்ச சில்லறை விலைக்கு முட்டையை விற்க முடியாது என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.