கடவுச்சீட்டு தொடர்பான அனைத்து கட்டணங்களும் இன்று (வியாழக்கிழமை) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சாதாரண சேவைக்காக அரவிடப்பட்ட 3,500 ரூபாய் என்ற கட்டணம் 5,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு நாள் சேவைக்கான கட்டணம் 15,000 ரூபாய் இருந்து 20,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திங்கட்கிழமை முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட பிரேரணையை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

















