600மில்லியன் டொலர்களாக இருந்த எரிபொருள் விலை தற்போது 200-250 மில்லியன் டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட சிறந்த நிலையில் இருப்பதாகவும் எரிசக்தி துறையை மறுசீரமைக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.