மனிதக் கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் அதிகாரியான குஷான் என்பவர் தொடர்பாக கடந்த பெப்ரவரியிலேயே முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளமை அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) தெரியவந்துள்ளது.
தற்போது குற்றச்சாட்டுக்கு இல்லாகியுள்ள குறித்த தூதரக அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை நாட்டுக்கு மீள அழைக்கவுள்ளதாகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் விமலசிறி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஊடகங்களில் செய்தி வெளிவந்ததன் பின்னரா அவர் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என கோபா குழு உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய வினவியபோது இல்லை அதற்கு முன்னதாகவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததாகவும் திகதி சரியாக ஞாபகம் இல்லை என்றும் செயலாளர் பதிலளித்துள்ளார்.
மேலும் இதன்போது கடந்த பெப்ரவரி மாதத்திலேயே குறித்த தூதரக அதிகாரி தொடர்பில் உள்ளக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அப்போதைய கோப் குழு தலைவர் உத்தரவிட்டதாக தேசிய கணக்காய்வாளர் அலுவலகத்தின் மேலதிக கணக்காய்வாளர் கூறியுள்ளார்.
எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.