உலகின் மிக சக்திவாய்ந்த அணுசக்தியைக் கைப்பற்றுவதே தனது இறுதி இலக்கு என வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார்.
வட கொரியாவின் மிகப்பெரிய ஹ்வாசோங் 17 என்ற கணடம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சமீபத்தில் பரிசோதைக்கப்பட்ட நிலையில் நேற்று சனிக்கிழமை இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
மேலும் வடகொரியாவையும் தமது மக்களின் கண்ணியம் மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்கவே அணுசக்தியை உருவாக்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவை அடையும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உலகின் வலிமையான மூலோபாய ஆயுதம் என்றும் கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அணுவாயுத சோதனை தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையினால் கடந்த 18 ஆம் திகதி வட கொரியா கண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.