அரசியலமைப்பு சட்டத்தை மதிப்பதாகக் காட்டிக்கொண்டு நாள்தோறும் அதன் கொள்கைகளை பிரதமர் நரேந்திர மோடி மீறி வருவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற அரசியலமைப்பு சட்டத்தை உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
அதனை விமர்சித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், அரசியலமைப்புச் சட்டம் தயாரிக்கப்பட்டதில் பா.ஜ.க.விற்கு எந்தவிதத் தொடா்புமில்லை என கூறியுள்ளார்.
அரசியலமைப்பை ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்தும் எதிர்த்துவரும் நிலையில் சட்டத்தை மதிப்பாகக் காட்டிக் கொள்ளத் துடிக்கும் பிரதமர் மோடியின் நடவடிக்கை ஏமாற்றமளிப்பதாக கூறியுள்ளார்.
மேலும் 1949 ல் அம்பேத்கர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையின் இரு பத்திகளை என்றாலும் பிரதமரும் அவரின் தொண்டர்களும் படிக்க வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.