அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை வகுக்கப்பட்டால் சர்வதேசம் இலங்கையை முழுமையாக அங்கிகரிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ச்சியாக கருத்து வெளியிட்ட அவர், ‘இலங்கையில் சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் என்றுமில்லாத வகையில் தற்போது சர்வதேச மட்டத்தில் மிக மோசமான நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண யுத்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் தற்போது பொருளாதார குற்றச்சாட்டும் சர்வதேச அரங்கில் முன்வைக்கப்பட்டுள்ளது. ஜெனிவாவில் கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற 57 ஆவது கூட்டத்தொடரின் போது 7 நாடுகள் மாத்திரம் தான் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன.
இதேவேளை தமது வாக்கு வாங்கியை பாதுகாத்துக் கொள்வதற்கு அரசாங்கம் ஆட்சி செலுத்தி
இனவாதத்தின் ஊடாக அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள அரசாங்கம் சமூகத்தின் மத்தியில் அருவறுக்கத்தக்க பேச்சுக்களை பிரயோகித்தது.
இறுதியில் முழு நாடும் பொருளாதார பாதிப்பை எதிர் கொண்டு, நாட்டு தலைவர் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. இனவாதம் இல்லாத கொள்கையை செயற்படுத்தினால் சர்வதேசம் இலங்கையை முழுமையாக அங்கிகரிக்கும்.’ என்றும் குறிப்பிட்டார்.