வொஷிங்டன் டிசியில் அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கனை சந்தித்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துரையாடியுள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமாக அமெரிக்கா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் சப்ரி, இந்த சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவு மற்றும் கடுமையான நேரத்தில் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆதரவுக்காக அமெரிக்க மக்களுக்கும், பைடன் அரசாங்கத்திற்கும் அமைச்சர் அலி சப்ரி நன்றி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காலநிலை நெருக்கடியைச் சமாளிக்க இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் பாராட்டியுள்ளார்.
இலங்கை எதிர்கொள்ளும் பாரிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் அமெரிக்காவும் இலங்கையுடன் நெருக்கமாக செயற்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர், இந்த விஜயத்தின் போது, காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் மூத்த உரையாசிரியர்களையும் சந்திக்க உள்ளார்.