கடந்த 2002-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பாபா’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார்.
அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக ‘பாபா’ படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார்.
பாபா மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்த இந்த படத்தில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ், ரியாஸ் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ‘பாபா’ திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.
இதற்காக ‘பாபா’ படத்தின் புதிய காட்சிகளின் டப்பிங் பணியில் நடிகர் ரஜினிகாந்த் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். நேற்று பாபா படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருந்தது.
பாபா பாபா திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், பாபா படத்தில் மட்டும்தான் புகைப்பிடிக்கும் காட்சிகள் உள்ளதா? மற்றவை எல்லாம் புத்தர் பற்றிய படங்களா? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ரஜினிகாந்த் சமூதாய பொறுப்புள்ளவர் என்றும் அன்புமணி பாராட்டியுள்ளார்.