பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி பாடசாலை மாணவிகளும் போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பழக்கம் முன்னர் நகர்ப்புற பாடசாலைகள் தொடர்பில் மாத்திரம் பதிவாகியிருந்த போதிலும், தற்போது அது கிராமப்புற பாடசாலைகளுக்கும் பரவியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பெற்றோரின் போதைப்பொருள் பாவனையால் சிறுவர் இல்லங்களில் தங்கியிருப்பதாகவும், அவர்களில் பலர் துஷ்பிரயோக சம்பவங்கள் காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களின் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடும் வைத்திய நிபுணர் கலாநிதி தீபால் பெரேரா, இதனைத் தடுப்பதற்கு வலையமைப்புத் திட்டமொன்று தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.