மருத்துவர்கள், நிபுணர்கள் மற்றும் பல் சத்திரசிகிச்சை நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதை திருத்தும் இடைக்கால விதிகளுடன் கூடிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 12ஆம் திகதியிட்ட இந்த அறிக்கை, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் வெளியிடப்பட்டது.
இதன்படி, மருத்துவ ஆலோசகர்கள், அரசு மருத்துவ அலுவலர்கள், பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் அரசாங்கத்தின் பதிவு செய்யப்பட்ட மருத்துவ அலுவலர்களின் கட்டாய ஓய்வு வயது திருத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஜனவரி 01 முதல் ஜூன் 30ஆம் திகத வரையிலான காலப்பகுதிக்குள் பிறந்தநாளைக் கொண்ட மருத்துவ ஆலோசகர்கள், அரசாங்க மருத்துவ அதிகாரிகள், பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் அரசாங்கத்தின் பதிவு செய்யப்பட்ட வைத்திய அலுவலர்கள் ஓய்வுபெறுவதற்கு முன், சம்பந்தப்பட்ட வருடத்தின் ஜூன் 30ஆம் திகதி வரை பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும்.
இதற்கிடையில், ஜூலை 01 முதல் டிசம்பர் 31 வரையிலான காலப்பகுதிக்குள் பிறந்த நாளான மருத்துவ ஆலோசகர்கள், அரசாங்க மருத்துவ அதிகாரிகள், பல் சத்திரசிகிச்சை நிபுணர்கள் மற்றும் அரசாங்கத்தின் பதிவு செய்யப்பட்ட வைத்திய அதிகாரிகள் ஓய்வுபெறுவதற்கு முன்னர் டிசம்பர் 31ஆம் திகதி வரை பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த இடைக்கால விதிகள் எதிர்வரும் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.