வடக்கு நெற்பயிர்களில் தற்பொழுது மிகவும் தீ விரமாக இலைமடிச்சுக்கட்டியின் தாக்கம் அவதானிக்கப்படுவதாக வடமாகாண பதில் விவசாயப் பணிப்பாளர் அஞ்சனாதேவி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய காலநிலையானது இதன் பெருக்கத்திற்கு சாதகமாக காணப்படுகிறது.
விவசாயிகள் சரியான கட்டுப்பாடுகளை உரிய நேரத்தில் விவசாய போதனாசிரியரின் ஆலோசனையுடன் சிபார்சு செய்யப்பட்ட இராசயன நாசினிகளை பயன்படுத்தி கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
குறித்த நோயினை அடையாளம் காணுதல் எவ்வாறு எனின் இதன் குடம்பியானது நீளப்பாடாக இலைகளை மடித்து இலைகளின் உள்ளே இருந்து இழையங்களை அராவி உண்ணும். இதனால் இலைகள் வெள்ளை நிறமாகி மடிந்து உலர்ந்து காணப்படும்.
இதன் காரணமாக இலைகளின் பச்சையம் அகற்றப்பட்டு ஒளித்தொகுப்பு நடைபெறும். பரப்பளவு குறைவடையும் இதனால் விளைச்சல் பாதிப்படையும்.
கட்டுப்படுத்துவதற்கு சிபார்சு செய்யபபட்ட அளவில் விதை நெல் பயன்படுத்தல் (2 – 2.5 புசல் ஏக்கர்), பரிந்துரைக்கப்பட்ட அளவில் நைதரசன் பசளை பாவனை, இரைகொளவிகள் (பறவைகள்) அமர்ந்து இக்குடம்பிகளை உண்பதற்கு வசதியாக ஆங்காங்கே தென்னை மட்டை, கங்குமட்டை போன்றவற்றை நிலைநிறுத்தி வைத்தல்.
இராசயன கட்டுப்பாடுகளாககுளோரன்ரனிலிபுறோல் 20வீதம் தயோமெதொக்சாம் 20வீதம் 40கிராம் 1 ஏக்கர் (ஜதாக்கல் 4கிராம் 16 லீ. தாங்கி) நெபியுபெதனோசயிட் 200கிராம் 320 மி.லீ வீதமும் பாவிக்குமாறு அவர் மேலும் தெரிவித்தார்.