போதைப்பொருள் பாவனையிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்க ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை ஆரம்பிக்கும் நோக்கில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
இன்று (திங்கட்கிழமை) கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் போதைப்பொருள் பாவனையிலிருந்து பாடசாலை மாணவர்களை மீட்பது தொடர்பில் இங்கு விவாதிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முதற்கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் 200 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அண்மையில், மேல்மாகாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 75 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.