நோயாளிகளைப் பாதுகாப்பதற்காக இந்த வார ஆம்புலன்ஸ் வேலைநிறுத்தத்தின் போது போதுமான பணியாளர்கள் இருப்பதை தொழிற்சங்கங்கள் உறுதி செய்ய வேண்டும் என சுகாதார செயலாளர் ஸ்டீவ் பார்க்லே தெரிவித்துள்ளார்.
ஊதியம் தொடர்பான சர்ச்சையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள தொழிலாளர்கள் நாளை மறு தினம் (புதன்கிழமை) வெளிநடப்பு செய்வார்கள், ஆனால் உயிருக்கு ஆபத்தான அவசரநிலைகளுக்கு பதிலளிக்கப்படும்.
பாதுகாப்பிற்கான விரிவான திட்டங்களை வரைவதற்கு ஆம்புலன்ஸ் அறக்கட்டளைகளுடன் இன்னும் விவாதங்கள் நடைபெற்று வருவதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.
ஆனால், உயிருக்கு ஆபத்தான அவசரநிலைகளின் போது, என்ன சேவைகள் வழங்கப்படுகிறது என்பது குறித்து தெளிவு இல்லை என சுகாதார செயலாளர் ஸ்டீவ் பார்க்லே தெரிவித்துள்ளார்.
நெருக்கடியில் உள்ள மக்கள் தங்களுக்குத் தேவையான கவனிப்பைப் பெறுவதற்கு, அவசரகால பாதுகாப்புக்கான தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதை தொழிற்சங்கங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.