பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு மாநிலங்களில் பிரதமர் மோடியின் அரசு அமைதியை நிலைநாட்டியுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
எட்டு மாநிலங்களின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்காக வடக்கு கிழக்கு ஆணைக்குழுவின் ஐம்பதாவது ஆண்டு விழாவிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 8 ஆண்டு ஆட்சிக்காலத்தில் 50 முறைக்கும் மேலாக வட கிழக்கு மாநிலங்களைப் பிரதமா் மோடி பாா்வையிட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அப்பிராந்தியத்தின் வளா்ச்சிக்காக பல்வேறு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது என்றும் வன்முறை சம்பவங்கள் 70 சதவீதம் குரைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.