ஐக்கிய தேசிய கட்சி,பொதுஜன பெரமுன கூட்டணி என்பது புதிய விடயமல்ல என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இவ்விரு கட்சிகளுக்குமிடையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அவர்கள் செயற்ப்பட்டு வருவதாகவும் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அரசியல் இலாபத்திற்காக மட்டும் பயன்படுத்திக் கொண்ட அரசாங்கம் இன்று அதனை மறந்து உறங்கிக் கொண்டிருக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.
இதேவேளை நாட்டின் மாணவர் சமுதாயத்தை பயங்கரவாதிகளாகவும் போதைப்பொருள் பாவனையாளர்களாகவும் காண்பிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவித்தார்.
சட்டம் மற்றும் ஒழுங்கில் காணப்படுகின்ற பாரதூரமான பலவீனமே பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை தீவிரமடையக் காரணம் என்றும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் தமது அரசாங்கத்தில் சட்டம் ஒழுங்கு முறையாக பேணப்பட்டு பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.