அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
முதலாவது டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிவடைந்ததால் பெரும் சச்சரவுகள் ஏற்பட்டன.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் ஆரம்பமாகியுள்ளது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாய தென்னாபிரிக்க அணி முதல் டெஸ்ட் போட்டி போலவே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதில் அணித்தலைவர் டீன் எல்கர் 26 ஓட்டங்களிலும், சாரெல் எர்வீ 18 ஓட்டங்களிலும், டீ புரூய்ன் 12 ஓட்டங்களிலும், டெம்பா பவுமா 1 ஓட்டங்களிலும், ஜோண்டோ 5 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் அந்த அணி 67 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வெர்ரையன், மார்கோ ஜேன்சன் இருவரும் அரைசதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
அணியின் ஓட்ட எண்ணிக்கை 179 ஆக உயர்ந்த போது இந்த இணை பிரிந்தது.
இதில் வெர்ரையன் 52 ஓட்டங்களிலும், மார்கோ ஜேன்சன் 59 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த வீரர்களும் விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணி 68. 4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஓட்டங்களுக்கு சுருண்டது.
அவுஸ்ரேலிய அணி சார்பில் கேமரூன் க்ரீன் 5 விக்கெட்டுக்களையும், ஸ்டார்க் 2 விக்கெட்டுக்களையும், கம்மின்ஸ், போலண்ட் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதையடுத்து அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸ்காக தற்போது துடுப்பெடுத்தாடி வருகின்றது.