இலங்கை இராணுவ அதிகாரிக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ள நிலையில் அமெரிக்காவிற்கு எதிராக முரண்பட முடியாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
2008 ஆம் ஆண்டு மே மாதம் ஊடகவியலாளர் கீத் நொயார் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தில் மனித உரிமை மீறல் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மேஜர் பிரபாத் புலத்வத்தவிற்கு எதிராக தடைகளை அறிவித்துள்ளது.
மேலும், உலகெங்கிலும் உள்ள ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் வகையில் இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கை அதிகாரிகள் கடந்த வாரம் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து கரிசனை வெளியிட்ட போதும் தனிப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக எதனையும் தெரிவிக்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.