தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் பணிகள் நேற்று(வியாழக்கிழமை) முதல் ஆரம்பமாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
42 மையங்களில் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல். எம். டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
ஆறாயிரத்து 20 உத்தியோகத்தர்கள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், பரீட்சை பெறுபேறுகள் பெப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் 18ஆம் திகதி 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை 2 ஆயிரத்து 894 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்றதுடன், மூன்று இலட்சத்து 34 ஆயிரத்து 698 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.