மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட போசாக்கு குறைவான மற்றும் வறிய குடும்பங்களுக்கு உலக உணவுத் திட்டம் மற்றும் வேல்ட் விஷன் இணைந்து முன்னெடுக்கும் உலர் உணவு பொருட்கள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் கலந்து கொண்டார்.
மேலும் மாந்தை மேற்கு மற்றும் மடு பிரதேச செயலாளர்கள்,உலக உணவு திட்டத்தின் பிரதிநிதியும் கலந்து கொண்டார்.
மன்னார் மாவட்டத்தில் ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் 11 ஆயிரத்து 121 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆண்டாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 68 பயணாளிகளுக்கு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளது.
பயனாளி ஒருவருக்கு 50 கிலோ அரிசி,5 லீற்றர் தேங்காய் எண்ணை,20 கிலோ பருப்பு ஆகியவை வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.