பாரிய பொருளாதார நெருக்கடியின் போது பணத்தை அச்சடித்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் முதல் நாடாக இலங்கை மாறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தெரணியகல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் 2 ஆயிரத்து 500 பில்லியன் ரூபாய் நாணயத்தாள்கள் அச்சிடப்பட்ட போதிலும், அவை அன்றாட செலவுகளுக்கு பயன்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.