வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் 6ஆம் நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக பேரணியாக ஆரம்பிக்கப்பட்டு A9 வீதி ஊடாக டிப்போ சந்தியில் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது, பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்ததுடன், அமைதியாக போராடினர்.
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் இணைய வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
குறித்த போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து மக்கள் கலந்துகொண்டனர்.