மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் சுத்தம் செய்து மகிழ்ச்சிகரமான கல்விச் சூழலை உருவாக்கும் நோக்கில், செயற்படுத்தப்படும் விசேட வேலைத்திட்டம் களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டது .
பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைக்கமைய , தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜின் திட்ட முன்மொழிவுக்கமைய மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் சுத்தம் செய்யும் பணி முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது பிரதேச சபை JCB இயந்திரம் மூலம் , பிரதேச சபை ஊழியர்கள், பெற்றோர்கள், இணைந்து இந்த பணியை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.













