குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக எகிப்து ஜனாதிபதி அப்துல் பட்டா இந்த மாதம் இந்தியா வருகின்றார்.
இதேபோல் ஜேர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் அடுத்த மாதம் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அவுஸ்ரேலிய பிரதமர் மார்ச்சில் இந்தியாவிற்கு செல்லவுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனும் மார்ச் முதல் வாரத்தில் இந்தியா வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிசக்தி, வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு உற்பத்தி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதே வெளிநாட்டு தலைவர்கள் இந்திய வருகையின் முக்கிய அம்சமாக இருக்கும் என கூறப்படுகின்றது.
நேபாள பிரதமர் புஷ்பா காமால் தாஹலும் அடுத்த சில மாதங்களில் இந்தியாவுக்கு வருவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.