இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அண்மைகாலமாக சீனாவின் பிரசன்னம் பொதுவாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக இலங்கை காரணம் சீனாவின் துணைத்தூதுவர் ஹுவெய் தலைமையிலான அதிகாரிகள் அடிக்கடி கிழக்கு மாகாணத்திற்கும் வட மாகாணத்திற்கு விஜயம் செய்து வருகின்றனர்.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் கிழக்கு மாகாண ஆளுநர் யஹம்லத்துடன்; கொண்டிருக்கின்ற நெருக்கமான உறவுகள் காரணமாக சீன அதிகாரிகளால் அந்த மாகாணத்திற்கு அதற்கு இலகுவாக விஜயம் செய்ய முடிகிறது.
இருப்பினும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.
அம்மக்களுக்கு சீனா உதவி செய்வதாக கூறி அங்கு விஜயங்களை செய்வதும் உதவி நிவாரணங்களை வழங்குவதும் சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஏனென்றால் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் இனவாதிகளால் ஒடுக்கப்பட்டபோது சீனா மௌனம் காத்தது.
அதேநேரம் சீனா தனது நாட்டில் உள்ள உய்குர் முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கி வருகிறது.
அவ்விதமான சிந்தனைகளைக் கொண்டதொரு சீனாவுக்கு திடீரென கிழக்கு மாகாணத்தின் மீதும், அங்குள்ள முஸ்லிம்கள் மீதும் பற்று ஏற்படுவதும், உதவிகளை அள்ளி வழங்குவதும் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது.
இதேநேரம் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மை சிங்கள மக்களாலும் அதேபோன்று சகோதரத்துவ மக்களின் கடும்போக்கு வாதிகளாலும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்ட போது சீனா குரல் கொடுத்து இருக்கவில்லை அவ்வாறான சீனா, தற்போது கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தொடர்பில் கரிசனை காட்டுவது ஆச்சரியமான விடயமாக உள்ளது.
அந்தவகையில் சீனாவும் கிழக்குமாகாண விஜயம் என்பது மக்களின் உட்கட்டமைப்பு வசதிகள் உதவி அளிப்பது என்பதற்கப்பால் அவ்வாறான ஒரு போர்வையில் மூலோபாய மிக்க கிழக்கு மாகாணத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதே நோக்கமாக் கொண்டது என்றே சொல்ல வேண்டியுள்ளது.
இது ஒருபுறமிருக்க இறுதியாக கடந்த மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த சீன அதிகாரிகள் தமிழர்களின் கலாசாரத்தை பின்பற்றுவதை வெளிப்படுத்தும் வகையில் பட்டுவேட்டி அணிந்து உலா வந்திருந்தனர்.
அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு செல்லும் முன்னதாக மன்னாரில் ஆக்கிரமிப்பு பகுதியில் உருவாக்கப்பட்டு வரும் பௌத்த விகாரை ஒன்றுக்கு அடிக்கல் நாட்டி விட்டு தான் சென்றிருக்கின்றார்கள்.
ஆகவே யாழ்ப்பாணத்துக்குச் செல்ல முதலில் தாங்கள் ஆக்கிரமிப்பு சக்திகளுடன் தான் கூட்டிணைந்து இருக்கிறோம் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இருப்பினும் அதனை மறைப்பதற்காக வறுமைக் கோட்டுக்குள் பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதாகக் கூறி நிவாரண பொதிகளை வழங்கியிருக்கிறார்கள்.
எது, எவ்வாறாயினும் சீன அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற வரலாற்று பெருமை மிக்க கோட்டையிலிருந்து தமது பயணத்தை ஆரம்பிப்பதாக அறிவித்திருந்தனர்.
எனினும் யாழ்ப்பாண கோட்டையை சுற்றிப் பார்த்த சீன அதிகாரிகள் யாழ்ப்பாணக்கோட்டைக்கு நுழைவுக் கட்டணமாக அறவிடப்படும் 4 டொலர்கள் வரையிலான பெறுமதி மிக அதிகம் என்றொரு கருத்தை முன் வைத்திருந்தார்கள்.
இது வேடிக்கையான ஒரு விடயமாகும். ஏனென்றால் யாழ்ப்பாண கோட்டை என்பது ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்ட மிகப்பழமை வாய்ந்த வரலாற்றுச் சின்னமொன்றாகும். அவ்விதமான கோட்டையை பராமரிப்பதற்கு கட்டியெழுப்புவதற்காக நுழைவு கட்டணமாக 4டொலர்களை அறவிடுவது சீனாவுக்கு அதிக தொகையாக தெரிகிறது.
ஆனால் அதே சீனா தன்னுடைய நிர்மாணங்களான தாமரை கோபுரம், துறைமுக நகரம், மத்தள விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளுக்கு நுழைவு கட்டணமாக 150க்கும் அதிகமான பணத்தை பெற்றுக் கொள்கிறது. இது எந்த வகையில் நியாயம் என்பதை சீன அதிகாரிகள் தான் வெளிப்படுத்த வேண்டும்.
ஏனென்றால் சீனா தனது நிர்மாணங்களை இலங்கையில் மேற்கொள்கின்றபோது அவை இலங்கை மக்களுக்காகத் தான் முன்னெடுப்பதாக அறிவித்திருந்தது.
எனினும் குறித்த நிர்மாணங்களை செய்வதற்கான நிதியை கடனாக அளித்த பின்னர் தற்போது நெருக்கடிகயில் இலங்கை சிக்கியிருக்கும் காலகட்டத்தில் குறித்த நிர்மாணங்களுக்கான நிர்வாகத்தினையும் சீனா தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.
இதனைவிட இலங்கையின் ஒரு பகுதியாக இருக்கின்ற துறைமுக நகரத்தில் சாதாரண மக்கள் நுழைவது என்றால் கூட புதிய விசா நடைமுறையையும் அறிமுகப்படுத்தி இருப்பதால் அதனையே பின்பற்ற வேண்டியுள்ளது.
அவ்விதமான செயற்பாடுகளை மேற்கொள்ளும் சீனா யார் வேண்டுமானாலும் பிரவேசித்து வெளிவரக்கூடிய நிலையில் இருக்கின்ற யாழ்ப்பாணம் கோட்டைக்கு அறவிடப்படும் கட்டணம் தொடர்பில் கருத்துக்களை வலியுறுத்தி இருப்பது கவலைக்குரியதாகும்.
இதேநேரம் யாழ்ப்பாணத்தில் புத்திஜீவிகள் உள்ளிட்ட பல தரப்பினரையும் சந்திப்பதற்கு சீனா முனைந்திருக்கின்றது.
அத்துடன் பல தரப்பினருக்கு பரிசுப்பொதிகளை வழங்கி சந்திப்பைச் செய்துமுள்ளது.
இது உண்மையில் சீனா தமிழ் மக்களை நெருங்கி வருகின்ற சமிக்ஞையைக் காண்பிப்பது போன்று தோற்றமளிக்கலாம்.
ஆனால் இதே சீனா பாதிக்கப்பட்டு இருக்கின்ற தமிழ் மக்கள் நீதி போராடி போராடி வருகின்ற நிலையில் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்பட்டு இருக்கிறது.
தொடர்ந்தும் அவ்வாறே செயற்பட்டு வருகின்றது. அதேபோல இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் அது நாட்டிலுள்ள உள்ளக விடயமென்று கூறி ஒதுங்கி நிற்கிறது.
இவ்விதமான பிரதிபலிப்புக்களைச் செய்யும் சீனா தமிழ் மக்கள் மீது கரிசனை காட்டுவது போலி நாடகம் என்பது அப்பட்டமாக தெரிகிறது.
எனவே சீனா வட மாகாணத்தில் காலூன்றுவதற்கான மூலோபாயமாகவே தமிழ் மக்கள் மீது கரிசனைகள் உள்ள தரப்பாக தம்மைக் காண்பித்து வருகின்றமை மிகவும் தெளிவாக புரிந்து கொள்ளக்கூடிய தோன்றும் உதயம் ஆகும்.